நாட்டின் நலனுக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி இளைஞர்கள்களை வலியுறுத்தியுள்ளார்.
மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மிக முக்கியமான சில விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இன்று கார்கில் நினைவு தினம் என்பது கொண்டாடப்படுவது. அந்தப் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய மக்களுக்கான உத்வேகத்தை அளித்து கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த கார்கில் நினைவு தினத்தையடுத்து நாட்டின் பல முக்கியமான நலம் சார்ந்த விஷயங்களை நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, பொய்யான தகவல்களை பரப்புவது என்பது நாட்டிற்கு மிகப்பெரிய கேடாக இருந்து வருகிறது. எனவே இளைஞர்கள் அதனை செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக முடியவில்லை. அதற்க்கு எதிரான போர் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நிறைய இடங்களில் வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் முகக் கவசங்களை அணியும் சவுகரியமாக இல்லை என மூக்கில் இருந்தும், வாயில் இருந்து எடுத்துவிட கூடாது. 8 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் இந்த முறைகளை பயன் படுத்தி இருப்பதை நாம் பார்க்கின்றோம். எனவே நாம் எடுக்கும் போது சமயங்களில் இவர்களை நினைத்து கொள்ள வேண்டும், இவற்றை நாம் செய்யக்கூடாது என்ற ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதேபோல அசாம் , பீகார் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டிருக்க கூடிய வெள்ளம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். கொரோனா காலத்தில் சில முன்னெடுப்புகளை செய்யக்கூடிய தனிநபர்களை பாராட்டக்கூடிய விஷயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார். மதுரையில் தனது மகனின் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நலத் திட்டங்களுக்காக எப்படி வழங்கினார்களோ…. அதே மாதிரி சில முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்.