நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் சினிமா திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன ஊரடங்கு தளர்வுவிற்கு பிறகு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இதனால் சினிமா தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் மீடியா குழு டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் அமித்கரே அடுத்த மாதத்தில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் திறக்க பரிந்துரைத்தார். அதோடு ஒவ்வொரு சீட் வரிசைக்கும் இடையில் ஒரு வரிசை காலியாக விடபட வேண்டும் என்றும், ஒவ்வொரு சீட்டுக்கும் இடையே இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.