திருப்பத்தூரில் கோவிலுக்குள் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி என்ற பகுதியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது கோவிலுக்குச் சென்ற அக்கிராமத்தின் மக்கள் அதனைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அகற்றி பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அந்த இளைஞர் நீண்ட நேரமாக போராடி மலைப்பாம்பை பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பாம்பை பாதுகாப்பாக கைப்பற்றி அருகிலிருந்த வனப்பகுதியில் விட்டனர்.