Categories
உலக செய்திகள் கொரோனா

அனைவருக்கும் இனி இலவசம்… பிரான்ஸ் நாட்டின் முக்கிய முடிவு…!!

கொரோனா தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் நிலையில் பிரான்ஸ் அரசு இலவச பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது.

ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் தொற்று அதிகரிப்பதை கூர்ந்து கவனிப்பதால் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி கொரோனா நோய் தொற்றுகளை கண்டறியும் PCR நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக் கேற்றது போல் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 528 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 பேர் ஆகவும் உள்ளது.

 

Categories

Tech |