அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது வரை 123 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பீகார், அசாம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26.38 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மோரிகான் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்திருக்கின்றது. இத்தகைய சூழலில் அரசு நிவாரண பணிகள் அனைத்தையும் முடக்கி விட்டது. பல மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 564 நிவாரண முகாம்களில் 47 ஆயிரத்து 772 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயத்தில் கோல்பாரா என்ற மாவட்டத்தில் வெள்ளத்தால் 4.7 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரம்மபுத்திரா உட்பட்ட பல்வேறு முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அசாம் மாநிலத்தில் மிகவும் மோசமான சூழல் உருவாகியுள்ளது.