திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்துவந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காசிபாளையம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின்போது கொரோனா முழு ஊரடங்கிலும் மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபர் பிடிபட்டார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த அனைத்து மது பாட்டில்களையும் கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்ற 21 வயது இளைஞர் என்பதும், நேற்று முழு ஊரடங்கு என்பதால் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்து விற்பனை செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் அதிக மதுபானங்களை வாங்கி விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.