கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த தாயால் தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவி விடும் என்று கூறி வீட்டினுள் அனுமதிக்காத சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம் நகரைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயால், தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மகனும், மருமகளும் வீட்டை பூட்டிவிட்டு, அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்துள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் கைவிரித்த நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணிடம் நெருங்கவே அச்சப்பட்டடுள்ளார்கள். இதனால் மன வேதனை அடைந்த அந்த பெண்மணி தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அரசு அலுவலர்களை நாடியுள்ளார்.