மேஷ ராசி அன்பர்களே …! இன்று தனவரவு திருப்தி தரும் நாள் ஆக இருக்கும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனையும் படைப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்று உறவினர்கள் வழியில் கேட்கலாம். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். நம்பிக்கைகளும் சடங்குகளும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். ஆன்மிகத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.
உங்களின் செயல்பாட்டினால் உங்களுடைய குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும். அதே போல குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் சில முக்கியமான பணியையும் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை நல்லபடியாக தான் இருக்கின்றது. காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். எப்போதும் போலவே வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கும்.
இப்போதைக்கு நீங்கள் தயவுசெய்து தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். அதற்காக தடங்கல் ஏதும் வாங்க வேண்டாம். புதிய முயற்சிகளில் கண்டிப்பாக ஈடுபடவேண்டாம் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.