தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.13 லட்சத்தை தாண்டி பாமர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்றய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 116 (58 அரசு + 58 தனியார்). இன்று மட்டும் 62,305 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதால் இதுவரை 22,62,738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,471-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,56,526ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 85 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த உயிரிழப்பு 3,494-ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 75 பேர் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 73.24 % குணமடைந்துள்ளனர்.
அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 94,695ஆக உள்ளது. சென்னையில் தற்போது வரை 13,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வரை கொரோனவுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,703ஆக இருக்கின்றது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழக்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 24 மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு :
சென்னை – 26
மதுரை – 8
செங்கல்பட்டு – 5
திருவள்ளூர் – 5
விருதுநகர் -5
வேலூர் -4
நெல்லை-4
ராணிப்பேட்டை – 3
காஞ்சிபுரம் – 3
குமரி -3
தி.மலை – 3
ராமநாதபுரம்-2
தென்காசி-2
தேனி – 2
சேலம்-1
தஞ்சை-1
திருச்சி -1
தர்மபுரி – 1
புதுக்கோட்டை-1
திருப்பத்தூர்-1
நாகை-1
தூத்துக்குடி – 1
கோவை – 1
நாமக்கல் -1