Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…எதிலும் நிதானம் தேவை…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று தொட்ட காரியம் துலங்கும். தொழில்நுட்பத்தில் கொஞ்சம் கடினமான சூழலில் இருக்கும். தொல்லை தந்தவர்கள் உங்களுக்கு விலகிச் சென்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு சிறு பிரச்சினைகள் புதிதாக தோன்றும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவை எடுக்கக் கூடும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் நீங்கள் செயல்பட வேண்டும். யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் ஓரளவு நல்ல முடிவை கொடுக்கும். நிலம் வீடு ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மை இருக்கும். குடியிருக்கும் வீட்டினை மாற்றலாம் என்ற சிந்தனை மேலோங்கும்.

பணம் வரவு இன்று காலத் தாமதம்தான் உண்டாகும். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் சில பிரச்சினைகளில் தயவுசெய்து தலையிடாமல் இருந்தாலே போதுமானது. யாருக்கும் பஞ்சாயத்து நீங்கள் எந்த விதத்திலும் கருத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். அது மட்டுமில்லாமல் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை என்ன வேண்டாம். இந்த விஷயங்களை  இன்று அதைவிட முக்கியமானது வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லவேண்டும்.

கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் இன்று வரலாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். மிக முக்கியமாக சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. காதலர்கள் கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |