நடிகர் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக விளங்கி வருகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், வடசென்னை என அனைத்தும் மாஸ்டர் பீஸ் தான். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் படத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் ஊரடங்குக்கு பின்னர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்னதாகவே தனுஷ் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இது வடசென்னையின் 2-ம் பாகம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தை எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வெளி நாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது இப்படத்தை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிவடைந்து இயல்புநிலைக்கு திரும்பியவுடன் இந்த படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.