Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை முதல் – முக்கிய அறிவிப்பு …!

தமிழகத்தை ஆக்கிரமித்த கொரோனா தொற்று எப்போது குறையும் ? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடையே மேலோங்கி இருக்கிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட 2ஆவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனவை தடுப்பதற்கு பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் நிலையில் தமிழகம் முழுவதும்… அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நாளை முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக முகக்கவசம் விநியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். குடும்ப அட்டைகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முமுக கவசங்களை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |