Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மருமகனுக்காக பேசிய மாமனார்… கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்த பரிதாபம்…!!!

வாய்த்தகராறு காரணமாக  மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து ராஜீவ்காந்தியை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ராஜீவ்காந்திக்கும், 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ராஜீவ்காந்தியின் மாமனார் ராஜகோபால்  தடுக்க முயன்றுள்ளார். அப்போது 5 பேரும் சேர்ந்து ராஜகோபாலை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதனால் கீழே விழுந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகனை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்து கீழே தள்ளியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |