தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தான் கந்தசஷ்டிகவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதமிருப்பது எங்களது வழக்கம்.
இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டிகவசம் படித்தேன் என குறிப்பிட்டிருந்தார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதத்தின் மீது அதிக அளவு நம்பிக்கை உண்டு. அடுத்தவர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது மிகப்பெரிய தவறு எம்மதமும் சம்மதம் என பதிவிட்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்போது கந்தசஷ்டிகவசம் படிக்கும் காணொளியை பகிர்ந்தது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். (2-2)#தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா pic.twitter.com/XILnANEf8A
— Premallatha Vijayakant (@imPremallatha) July 26, 2020