இந்த ஆண்டு ஐபிஎல் லில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய அணி வீரர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நடக்க இருந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த வருடம் விராட்கோலி தலைமையிலான ஆர்சிபி அணிதான் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் இந்த வருடம் ஏலத்தில் தலை சிறந்த வீரர்களை அந்த அணி தன்வசப்படுத்தி உள்ளது. இப்போது ஆரம்ப கட்ட வீரராக ஆரோனை சேர்ப்பதன் மூலம் பவர் பிளே ஓவர்களில் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
நடுத் தர வரிசையில் விராட்கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும். அதோடு அவரது பந்துவீச்சு வரிசையிலும் ரிசர்ட்சன், டெல் ஸ்டெய்ன் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த வருட ஆர் சி பி சிறந்த அணியாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த வருடம் வெற்றிக் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும் வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார்.