அமெரிக்காவில் அனுமதி இன்றி வீட்டில் நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா ஃபர்வியு ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த மார்க் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த மார்க், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மார்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது, சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்ட்.கிளைர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மார்க் 3 லட்சம் டாலர் பணம் செலுத்தினால் ஜாமினில் வெளிவர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.