தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருவது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கட்டுப்படுத்தியது போல் பிற மாவட்டங்களிலும் கொரோனவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமிழக அரசு பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை கட்டு படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் திட்டங்களை வகுத்துள்ளது.
அடுத்து வழக்கம்போல நேற்றைய ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை சனிக்கிழமை மாலை முதல் தொடங்கி இன்று காலை வரை அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது கோவை மாநகராட்சியில் முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படும் அந்த முக்கியமான உத்தரவில், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.