ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை கொடுப்பதால் பரிசோதனைகளின் போது தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசு பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும் பரிசோதனையின் போது ஆதார் விவரத்தை RTPCR செயலியில் லேப் டெக்னீசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.