மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வில் நாடு முழுவதும் திரையரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தளர்வுகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 25 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கவும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும், அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள், மெட்ரோ ரயில்கள், இயக்கப்படாது என்றும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் இயங்காது என்றும் தெரியவந்துள்ளது. நோய் தொற்று பரவலின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கம் குறித்து மாநிலங்களே முடிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.