Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும்…..சந்தோஷத்தில் அழும் ஹர்பஜன்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு  அசத்தலாக மீண்டும் தமிழ் ட்வீட் செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து  160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக  பாப் டு பிலெசிஸ் 54 (38) ரன்களும், கேப்டன் தோனி 37 (23) ரன்களும், ராயுடு 21 (15)  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள்  இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 55(47) ரன்னில் ஆட்டமிழக்க, இறுதியில் சர்பராஸ் கான் 67(59) ரன்கள் குவித்து  ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியில் மிக அசத்தலாக பந்துவீசிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை சாய்த்தார்.

 

இந்நிலையில், சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியின் வெற்றி குறித்து தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில்,  “நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல. உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன். அத தாண்டி என் நண்பன் எம்.எஸ் தோனி சென்னை ரசிகர்கள் என்ன நம்புறாங்க அதுக்கு கைமாறா வெற்றி ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும் சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி” என பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |