Categories
சினிமா தமிழ் சினிமா

தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை….!!

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவி தான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவிக்கு கொரோனா என்று பரவிய செய்திக்கு  அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை வனிதா_  பீட்டர் பாலின் திருமணம் கொரோனவையும்  தாண்டி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதில் சென்னை வடபழனியில் சேர்ந்த சூரியா தேவி என்பவர் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தர்.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.  இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வனிதா அளித்த புகாரின் பேரில் சூரியா தேவியை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்தநிலையில் சூர்யா தேவிவிற்கு கொரோனா என்று செய்தி வெளியாகவே அதனை அவர் மறுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் உதவியுடன் தேவையின்றி அவதூறு பரப்புவதாகவும் தான் தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை எனவும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |