Categories
சினிமா தமிழ் சினிமா

வசிக்க ஒரு வீடு கொடுத்து உதவ வேண்டும் – நடிகர் பொன்னம்பலம் வேண்டுகோள்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் பொன்னம்பலம் தனக்கு வசிக்க வீடு ஒன்றை கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சிறுநீரக செயலிழப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் திரு பொன்னம்பலம் தனக்கு வசிக்கும் வீடு ஒன்றைக் கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினர் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டை கலைஞர்யாக தனது சினிமா பயணத்தை துவங்கி படிப்படியாக வில்லனாக வளர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் வில்லனாக அவர் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு பொன்னம்பலம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தர். அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார் பலரும் தன் மீது காட்டும் அன்புக்கு நன்றி கூறியுள்ள அவர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த பலருக்கும் நன்றி என கூறியுள்ளார். தொடர் சிகிச்சைக்கு திரை உலகத்தினர் பலரிடம் உதவி கேட்டு இருப்பதோடு வசிப்பதற்கு ஒரு வீடு கொடுத்து உதவுமாறு முன்னணி நடிகர்களிடம் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |