Categories
உலக செய்திகள் கொரோனா

உலகம் முழுவதும் மகிழ்ச்சி…..! ஒரு கோடி பேர் மீண்டனர்….!!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும்  கொரோனா பாதிப்பால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது

சீனாவின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியயப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேலாக பரவியிருக்கும் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்களின்  எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டி இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேலானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி  பலியானோர்களின் எண்ணிக்கை 6.51 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Categories

Tech |