திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது
கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக 444 பேர் மரணம் குறித்தும், ரேஷன் கடையில் முகக்கவசம் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்தும் இதுபோன்ற பல்வேறு தமிழக அரசின் முறைகேடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் செய்ய உள்ளது.
அதோடு சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிராக பரவிவரும் பரவி வரும் செய்திகளை கண்டித்தும் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. இறுதியாக கூட்டத்தின் நிறைவில் தமிழக ஆளுநரை சந்திக்கவோ அல்லது போராட்டமொன்றை முன்னெடுக்கவோ தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.