தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சீனா தற்போது பூடான் நாட்டுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
சீன நாடு இந்தியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்து மீறிய ஆக்கிரமிப்பு செய்து தாக்குதலில் ஈடுபட்டது.அத்தகைய தாக்குதலில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால், சீனா பின்வாங்கிச் சென்றது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கின்ற பூடான் நாட்டில், சீனா தன்னுடைய வழக்கமான வேலையை காட்டி இருக்கின்றது. பூடானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலமாக நிதி திரட்டும் பணியில் பூடான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு கூறிய சீனா, சக்தேங் சரணாலயத்தில் ஒரு பகுதி தங்களுக்கு உரிமையானது என்று கூறி பூடானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் இத்தகைய நிலைப்பாட்டினை பூடான் கடுமையாக கண்டித்துள்ளது. இதனைத்தொடர்ந்து எத்தகைய சூழ்நிலையிலும் இந்தியா மற்றும் சீனா மூன்று நாடுகளையும் பகைத்துக் கொள்ளாத பூடான், தற்போது சீனாவின் இத்தகைய செயலால் கடும் கோபமடைந்து உள்ளது. இதனால் இந்தியா நாட்டுடன் பூடான் மிக நெருக்கம் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக்கொண்டு, அசாமின் கவுகாத்தி யிலிருந்து அருணாச்சலின் தவாங் இடையே உள்ள 150 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் சாலையை பூடான் சரணாலயம் வழியாக அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது. இத்தகைய திட்டத்தை பூடான் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பூடானும் சீனாவும் எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள 1984 ஆம் ஆண்டு முதல் 24 முறை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது பூடானில் உள்ள டோக்லாம் சின்சுலாங், டிரமனா மற்றும் ஷக்தோ என மேற்கு செக்டாரில் பரந்து விரிந்துள்ள 269 சதுரகிலோமீட்டர் இடங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பூடான் உடன் சீனா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்தால் பசம்லங் மற்றும் ஜவர்லாங் பள்ளத்தாக்குகளில் உரிமை கொண்டாடுவதை நிறுத்தி விடுவோம் என சீனா கூறியுள்ளது. இருந்தாலும் சீனாவின் இத்தகைய கோரிக்கையை பூடான் தற்போதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.