Categories
மாநில செய்திகள்

முடிவு எடுத்த பாஜக சர்க்கார்…. ஒன்று சேர்ந்த தமிழகம்… செக் வைத்த ஐகோர்ட் …!!

அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்திருக்கின்றது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கமுடியாது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. மேலும் மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை என்ற ஒரு கருத்தையும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |