Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி இந்த இரு நாடுகளிலிருந்தும் பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.  வங்காள தேசத்தின் சுருக்கமான இரண்டு பத்தி அறிக்கையில் காஷ்மீரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் வங்காள தேச வெள்ளம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஒரு  அறிக்கையில், பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பற்றி “பாகிஸ்தானின் பார்வையை பகிர்ந்து கொண்டார்” எனவும் , “அமைதியான தீர்மானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்” எனவும் கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதன் அனைத்து முன்னேற்றங்களும் இந்தியாவின் உள் விவகாரங்கள் என்ற அவர்களின் நிலையான நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். இது அவர்கள் எப்போதும் எடுத்துள்ள நிலைப்பாடு” என்று வெளியுறவு அமைச்சகத்தின்  செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும்  சில வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. “நிச்சயமாக இந்தியா கவலை கொள்ள  வேண்டும்” என கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஆய்வாளரும் ஈஸ்டர்ன் லிங்க் என்ற செய்தி இணையதளத்தின்  ஆசிரியருமான சுபீர் பவுமிக் கூறியுள்ளார். வங்காள தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மீட்ட விதம், மேலும் லடாக்கில் சீனாவுடன் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நேரத்தில் திடீரென மனநிலை மாறி இருக்கின்றது. திரைக்குப் பின்னால் உள்ள சீனாவின்  சில இராஜதந்திர சூழ்ச்சிகளைக் குறிக்கிறது. பிரதமர் ஷேக் ஹசீனா அலுவலகத்தில் பாகிஸ்தான் சார்பு குரல்கள் “மற்றும் காஷ்மீர்  பிரச்சினை எழுப்பப்படுவது” என்பது சிறப்பு கவலை. “ஷேக் ஹசீனா ஒரு லக்ஷ்மண கோட்டை மிகவும் தீர்க்கமான வழியில் கடந்துவிட்டாதாக தெரிகிறது என கூறி இருக்கின்றார்.

Categories

Tech |