Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தைப் பிறந்த 2 நாட்களில்… தத்தெடுத்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக பலியான சோகம்..!!

சொந்தக் குழந்தைப் பிறந்த 2 நாட்களிலேயே தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறு குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெற்றோரின் கவனக்குறைவால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியாகும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பாம்பன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஜெனிஸ்.. இவருக்கும், லிபிஜோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.. இதனால் ஆல்பிரின் என்ற குழந்தையை இருவரும்  தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.. இதற்கிடையே மனைவி லிபிஜோ உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  உயிரிழந்தார்.

இதையடுத்து அருண் ஜெனிஸ், ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் ரதி தேவி என்ற ஒரு பெண்ணை 2ஆவதாக திருமணம் செய்துக்கொண்டார்.. இந்தநிலையில், ரதி தேவிக்கு 2 தினங்களுக்கு முன்னதாக குழந்தை ஓன்று பிறந்துள்ளது. இதன் காரணமாக, 4 வயதுடைய  தத்தெடுத்த மகனை தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் விட்டுள்ளனர்..

இந்நிலையில், சிறுவன் ஆல்பிரின் வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுவன் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று பந்து தண்ணீர் தொட்டியில் விழுந்ததாகவும், அதை எடுக்கமுயன்றபோது தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ஆல்பிரின் மரணமடைந்திருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுவதாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர். இதையடுத்து இந்தவிவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. உயிரிழந்த சிறுவனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது.

Categories

Tech |