Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரதமர் பாராட்டுனது ஊக்கம் அளிக்குது – நாமக்கல் மாணவி நெகிழ்ச்சி …!!

நாமக்கல் மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் அளித்தியிருப்பதாக கூறி இருக்கின்றார். 

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி. காலனியில் நடராஜன் என்ற லாரி டிரைவர் அவரது மனைவி மற்றும் சிவானி, கனிகா என்ற இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவில் 500-க்கு 490 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளார். நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி யில் நாட்டு மக்களுக் உரையாற்றிய பிரதமர் மோடி லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிக்காவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில், கனிகா ஜி வணக்கம் எப்படி இருக்கிறீர்கள். முதலில் தாங்கள் அடைந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். நாமக்கல் பெயரை கேட்டவுடனே எனக்கு முதலில் ஆஞ்சநேயர் கோயில் தான் நினைவில் வரும். இனிமேல் உங்களுடன் பேசியது நினைவுக்கு வரும். தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து அனுபவம் எப்படி இருந்தது. உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன. உங்களுக்கு பிடித்தமான பாடம்.உங்கள் அப்பா நல்ல காரியம் செய்துள்ளார். அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்ற பிரதமர் மோடி அவருடன் உரையாற்றினார்.

அதற்கு பதில் கூறிய பின்னர் கனிகா தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நாட்டின் பிரதமர் என்னை பாராட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி என்னை பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இத்தகைய நினைவை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று கனிகா கூறியுள்ளார்.

Categories

Tech |