அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல் சர்வதேச நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா, கொரோனா வைரஸை வேண்டுமென்றே சீனா உலக நாடுகள் அனைத்திலும் பரப்பி உள்ளதாக தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகத்தை உடனடியாக மூடுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இத்தகைய முடிவானது அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் கூறியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கின்ற மேலும் சில சீன தூதரகங்களை மூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் முறையில் சீனா, செங்டு நகரில் இருக்கின்ற அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இருக்கின்ற சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டுவில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க துணை தூதரகம் செயல்படுவதற்கான தங்களின் ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான முடிவை சீன அரசு அறிவித்திருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் சீன தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனா கொடுத்த பதிலடியால், செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமெரிக்க கொடி இன்று காலை கீழே இறக்கப்பட்டு உள்ளது. சீன தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணை தூதரகம் செயல்படுவதற்கான தடையினை சீனா சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் இடையே ஏற்பட்டுள்ள இத்தகைய மோதல் ஆனது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.