ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், ஆரம்ப காலகட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாகவே கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,274 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.