Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ20,000 பணத்தை திருடி….. “ஆன்லைனில் பந்தயம்” தோற்று போனதால் தற்கொலை….. சென்னை அருகே சோகம்…!!

ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி தோற்றதால் மன உளைச்சல் அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரை முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக இருந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வரும் பட்சத்தில், பிற நேரங்களில் நேரத்தை செலவழிப்பதற்காக தாயம், ஆடு புலி ஆட்டம் என நமது பாரம்பரிய விளையாட்டுகளை ஒரு சில குடும்பங்கள் விளையாண்டு வர, ஒரு சிலர் மொபைல் கேம்ஸ்களில் ஆர்வத்தை செலுத்தி வந்தனர்.

அதிலும், ஏராளமானோர் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைனில் பணத்தை வைத்து பந்தயம் கட்டி விளையாடுவதாக தகவல் ஒன்று வெளியாகியது. அந்தவகையில், சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த நித்தீஷ் என்ற மாணவர் ஆன்லைன் விளையாட்டில் சிறு சிறு தொகையை பந்தயம் கட்டி விளையாடி அதிகமான தொகையை பரிசாக வென்றுள்ளார். பின் நமக்கு திறமை இருக்கிறது.

அதிகப்படியான பணத்தை பந்தயம் கட்டி வெற்றி பெற்றால், ஏராளமான பணம் கிடைக்கும் என்ற பேராசையில் தான் வேலை பார்த்த கடையிலிருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை திருடி ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி அதில் தோற்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |