பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்தி வருகின்றனர். தற்போது ஆப்கானிஸ்தானிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவ படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
இத்தகைய நிலையில் சென்ற இரு தினங்களில் மட்டும் பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் கோக்யானி மாவட்டத்தில் மிர்சா கேல் என்ற பகுதியில் தேசிய பாதுகாப்பு இயக்குநகரம், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு 13 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்கள்.