சியோமி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூபாய் 38000 என்ற மதிப்பில் அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளவதில்லை. எனவே இதனுடைய விலை ஏற்றம் மக்களிடையே பெரிய அளவிலான பாதிப்புகளை தற்சமயம் ஏற்படுத்தவில்லை என்றாலும், ஊரடங்கிற்கு பின் இந்த விலை ஏற்றம் மக்களின் பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே பொதுமக்கள் அதிக கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் வகையில் நல்ல பேட்டரிகளை கொண்ட வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு வந்துவிட்டனர். இதனை தற்போது சியோமி நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. சியோமி நிறுவனம் புதிதாக நைன்பான்ட் பிராண்ட் சி30 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஆறு கிலோ எடை கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதன் விலை ரூபாய் 38,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.