Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. தமிழகத்தின் 89 தரமற்ற கல்லூரிகள்…..? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்…..!!

தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திக்கு அண்ணாபல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை இணையதளம் வாயிலாக தொடங்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தொடர்ந்து கல்லூரிகளில் அப்ளை செய்து வரும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என்று சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாக பரவி வந்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதில், தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரி என எதுவும் இல்லை. 89 கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது. மேலும் தரமானது தரமற்றது என இணைப்புக் கல்லூரிகளை பாகுபாடு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |