Categories
மாநில செய்திகள் வானிலை

வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் நீலகிரி கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதிகளுக்கு  மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Categories

Tech |