Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை- கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு கையாண்ட நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தேகமாக உள்ள 15,500 படுக்கைகளில்  12,500 படுக்கைகள் தற்போது  காலியாக உள்ளதாகவும்,

2800 நோயாளிகள் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று  வருபவர்களின் எண்ணிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 2 வது இடத்தில் இருந்த டெல்லி தற்போது  10 வது இடத்துக்கு சென்று விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.டெல்லியில் இரண்டாம் ஊரடங்கிற்கு தற்போது அவசியம் இல்லை என்றும் கூறினார்.

 

Categories

Tech |