Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…செலவுகள் கூடும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   புதிய முயற்சிகளை செயல்படுத்துவதற்கு திருப்பங்களை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரலாம். எதிர்பார்த்த சுப செய்தி பெறுவதற்கு காலதாமதம் தான் பிடிக்கும். உணவு உண்பதில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் கொஞ்சம் இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் கொஞ்சம் ஏற்படும் கவனமாக இருங்கள். ‘

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் அவ்வப்போது ஏற்படலாம். செலவுகள் கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். எதிலும் கவனமாக இருங்கள். முன்னேற்றம் உங்களை தேடி வரக்கூடும். மனதை அதுபோலவே அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் மட்டும் நிதானமாக இருந்துவிட்டால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றமே இருக்கும்.

காதலர்களுக்கு எந்த விதத்திலும் தடையில்லாமல் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |