மிதுன ராசி அன்பர்களே….! இன்று மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனதில் நிம்மதியும் மனோதிடமும் அதிகரிக்கும்.
தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுகிறீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை இன்று இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க உற்சாகமான நாளாக இந்நாள் இருக்கும். ஆனால் திடீர் செலவு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பொருட்கள் மீது கண்டிப்பாக முதலிடுகள் ஏதும் செய்ய வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
இன்று காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும் அனைத்து விஷயங்கள் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.