கடந்த 5 மாதங்களாக ஒவ்வொரு மனிதனையும் கலங்கடித்து கொண்டிருப்பது கொரோனா வைரஸ். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிக பாதிப்பு பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய பொது சுகாதார நிறுவனம் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் ஆகஸ்ட் 2, 3 ஆவது வாரத்தில் கொரோனா உச்சநிலை அடையும் என எச்சரித்துள்ளது. பொதுவாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் வேறு ஒருவருக்கு பரவுவதற்கு 10 முதல் 14 நாட்கள் ஆகும். தற்போது தமிழகத்தில் பரவும் வேகத்தை பார்க்கும்போது ஆகஸ்டு உச்சம் தொடும் என கூறியுள்ளது.