Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…உற்சாகமாக காணப்படுவீர்கள்…கவலைகள் நீங்கும்….!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் கண்டிப்பாக தரவேண்டாம். தொழில் வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும். முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும்.

உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் தொட்டது ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும். தேவையில்லாத விஷயத்திற்காக செலவுகளை மட்டும் செய்ய வேண்டாம். சிக்கனத்தை கடைபிடிக்க கூடுமானவரை புதிதாக கடன் வாங்க வேண்டாம்.

மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |