மீன ராசி அன்பர்களே…! அக்கம்பக்கத்தில் உடன் அன்பு பாராட்டும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் சிறப்பாக வந்து சேரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுயகவுரவம் பாதுகாத்தவர்கள் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். மென்மையான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நல்ல சாதகமான பலனையே கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் பணிகள் திருப்தியைக் கொடுக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் உடன் இருந்த பழைய பிரச்சினைகளும் தீரும். மதிப்பு உயரும் நாளாக இருக்கும். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவும் இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்ல வேண்டும்.
வாகனப் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். காதலர்களுக்கு என்றால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடத்த முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.