Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் கடைசி நாள் – முக்கிய அறிவிப்பு வெளியாகியது ..!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

அடிக்கடி வரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வீட்டில் முடங்கி இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் பெல்லோ பணிக்கு M.sc, Physics, M.Phill உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. www.pdu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,  அதனை பூர்த்தி செய்து 16.08.2020க்குள் அனுப்பவேண்டும். சம்பளம் 14 ஆயிரம் ரூபாய் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Categories

Tech |