Categories
மாநில செய்திகள்

மீண்டும் வரலாம்….. அன்போடு வரவேற்கும் சென்னை….. நெறிமுறை வெளியிட்ட தமிழக அரசு….!!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பிறமாநில, மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் பிழைப்பிற்காக வேலை செய்து வந்தனர். படித்த இளைஞர்கள் பலர் சென்னையில் இருக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில்,

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தனர். பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று விட்டனர். தற்போது  ஊரடங்கில் பல தளர்வுகள்  ஏற்படுத்தபட்டதையடுத்து பல தொழில் நிறுவனங்கள், தனிக் கடைகள் சந்தைகள் என அனைத்தும் இயங்கத் தொடங்கி ஒரு சாதாரண வாழ்க்கைக்கு மக்கள் முன்னேற்றபட்டு வருகின்றனர்.

எனவே  புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீண்டும் சென்னைக்கு அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல விரும்பினால், தாராளமாக செல்லலாம் என்று கூறி, அதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம் திரும்புவோர் அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னை , கோவை உள்ளிட்ட பகுதிக்கு வேலைக்காக  செல்ல விரும்புவோர் பிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும்.

அந்தப் பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழ் பெறவேண்டும். நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்பும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்பே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த பிசிஆர் பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதி உள்ளிட்டவற்றிற்கு ஆகும் கட்டண செலவுகள் அனைத்தையும் அந்தந்த தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட நடைமுறைகள் யாவும் ஊரடங்கு முற்றிலும் இல்லாத பட்சத்தில் சாதாரண போக்குவரத்து அனைத்தும் நடைமுறைக்கு வந்தபின் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |