Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்….!! கவலையில், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் …!!

நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT  தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர்.

இது நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினையாக  இருந்தாலும் தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் நடிகர் சூர்யா தயாரித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் OTT தலத்தில் ரிலீஸ் ஆனது. இதனால் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரின் படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவில் இப்போதும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |