Categories
தேசிய செய்திகள்

“கொரோனா அறிகுறி” மருத்துவமனைக்கு கூட அனுமதிக்கல….. தாய்,மகனை பூட்டி வைத்து டார்ச்சர்…..!!

ஆந்திராவில் கொரோனா அச்சம் காரணமாக தாய் மகன் இருவரையும் வீட்டிற்குள்ளேயே பூட்டு போட்டு வீட்டு உரிமையாளர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை.

கொரோனா நோய் தோற்றாலும், அதனை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினாலும்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மன வேதனையில் மக்கள் இருந்து வரும் சூழ்நிலையில், அவ்வப்போது  சில மனிதர்கள் செய்யும் மனிதாபிமானமற்ற செயல்களும் மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், ஆந்திராவில் உள்ள சட்டெனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தாய், மகன் இருவருக்கும் கொரோனா அறிகுறி இருந்துள்ளது.

இதனால் அவர் வீட்டின் உரிமையாளர் எங்கே மற்றவர்களுக்கும் தொற்று பரவி விடுமோ என்ற பயத்தில் இருவரையும் வீட்டிற் குள்ளேயே வைத்து பூட்டி விட்டார். இதனால் சாப்பாடு வாங்குவதற்குக் கூட வெளியே செல்ல முடியாமல் இருவரும் தவித்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு செல்லவும் வீட்டின் உரிமையாளர் அனுமதிக்கவில்லை. வெளியே வந்தாலே தொற்று பரவிவிடும்  என்று பூட்டுப் போட்டு பூட்டி உள்ளார்.

இதனால் செய்வதறியாது தடுமாறிய இருவரும் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |