கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த நிகழ்வும் அரங்கேறி வருகின்றது.
அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமானதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அவரின் கல்லீரலில் சிக்கி இருந்த கத்தியை வெற்றிகரமாக மீட்டனர்.