செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அச்சப்பட்டு பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆட்சீஸ்வரர் கோவில் தெருவில் பரிசோதனை முகாம் நடைபெற்றபோது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சோதனை செய்ய அச்சப்பட்டு தலைமறைவாகிவிட்டனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளிவர மறுத்துவிட்டனர்.
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக மக்கள் காத்துக்கிடக்கும் போது அரசு சார்பில் நடைபெற்ற பரிசோதனை முகாமுக்கு யாரும் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. ஒருசில இடங்களில் கொரோனா சோதனை முடிவுகளை மாற்றி கூறிவிடுவது பொதுமக்கள் அச்சத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.