Categories
தேசிய செய்திகள்

பாஜக கட்சிகாரர்களை தவிர….. பிறருக்கு அனுமதி… அழைப்பு இல்லை….. வெளியான தகவலால் பரபரப்பு….!!

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பாஜக கட்சி அல்லாத பிறருக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக பிரபலமான புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியில் பல பிரச்சனைகளுக்கு தடைகளுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்புகள், கோவிலை எடுத்து கட்டவிற்கும் நிறுவனம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வருகின்ற ஐந்தாம் தேதி பூமி பூஜை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவரும் கலந்து கொள்ள இருக்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவரும், பிரதமரும் ஒன்றாக பங்கேற்க உள்ள முதல் நிகழ்ச்சி இது. இந்த விழாவிற்கு பாஜக அல்லாத பிற கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மராட்டிய முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்துக் கடவுளான ராமர் அனைவருக்கும் பொதுவானவர் பொதுமக்கள் அனைவரும் வழிபடக்கூடிய பொதுவான கடவுளுக்கான இவ்விழாவில் பாஜக கட்சியினரை தவிர பிறருக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது சரியான முடிவல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |