தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ரகிட ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ப்ரூஸ்லீ, இளைய சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான இளம் அசத்தல் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் பிறந்தநாள் என்று ஆரவாரத்தோடு இருக்கும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக அவர் நடிக்கும் ஜகமே தந்திரம் என்கிற படத்திலிருந்து சூப்பர் ஹிட் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரகிட ரகிட ரகிட என வரிகளைக் கொண்ட அந்தப் பாடலை கேட்கும்போதே உள்ளுக்குள் ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்படுவதாகவும், பாடலின் பின்னணியில் ஒலிக்கப்படுகின்ற பறை இசை ஆட்டம் போட வைப்பதாகவும் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இனி வரக்கூடிய நாட்களில் இந்த பாடலுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தனுஷ் ரசிகர்களின் கலக்கல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/3xbswdKgvho